நல்லிக்கோட்டை
மன்னார்குடி
திருவாரூர்
தமிழ்நாடு
இந்தியா
மன்னார்குடி பெரியகோயில்
என்ன நல்லிக்கோட்டை
என்று தலைப்பு போட்டுவிட்டு மன்னார்குடி பெரிய கோயில் என்ற
தலைப்பும் , கோயில் படத்தையும்
போட்டு இருக்கு என்றுதானே பார்கிறிங்க , நல்லிக்கோட்டை என்ற
எங்கள் ஊர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி வட்டத்தில்
அமைந்துள்ளது . எனவே முதலில் மன்னார்குடியை பற்றி பார்ப்போமா,
மன்னார்குடி
என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது ராஜகோபாலசுவாமி
கோயில்தான் எனவே அதை முதலில் தரிசிப்போம். அதில்
ராஜகோபாலசுவாமி மற்றும் தேவி செங்கமலத்தாயார் சன்னதியும் உள்ளது .
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருகோயில் முகவாயில்
இங்கு
திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும் , அதிலும் பங்குனிதிருவிழா
தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது ( தமிழ் மாதம் - பங்குனியிலும் , ஆங்கில
மாதம் - மார்ச் ( MARCH ) / ஏப்ரல் ( APRIL ) ) இம்மாதம் நடைபெறும் .
முகவாயில் மாலைநேரம்
திருவிழாக்காலங்களில் மக்கள் கூட்டம் மன்றாடும் , வீதிகளில்
அழகானா தோரணங்கள் தொங்கும் , பட்ஜி மற்றும் வடை மனம் வீசும்.
ராஜகோபாலசுவாமி திருகோயில் வடதுபுறம்
இதன் அருகில் தென்னை மரம் மற்றும் பசுமை நிறைந்த சோலைகள்
காணப்படுகின்றன . இங்கு இயற்க்கை காற்று மற்றும் பசுமை வளங்கள்
நிறைந்துள்ளது .
மன்னார்குடி பெரியகோவில் குளம்
தெப்பக்குளத்தில் திருகோயில் கோபுர நிழல் இருக்கு பாருங்கள் ,
இக்குளம் மிகவும் அழகாக காட்சிதரும் , மிக அமைதி வாய்ந்தது
இது அமைந்துள்ள இடம் மன்னார்குடி - நீடமங்கலம் சாலை ஓரத்தில்
மன்னை ராஜகோபாலசுவாமி திருக்கோயிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ளது.
தெப்பக்குளத்தின் காட்சி
ராஜகோபாலசுவாமி திருகோயில் உட்புறம்
திருகோயில் உட்புறம் மிகவும் பழமை வாய்ந்த அழகு பொருந்திய
இருப்பிடமாகும் .இதோ ராஜகோபாலசுவாமி உருவம் வருகிறது பாருங்கள்
ராஜகோபாலசுவாமி சன்னதி
இதோ தேவி செங்கமலத்தாயார் உருவம்
வருகிறது தரிசிப்போம் வாருங்கள் .
செங்கமலத்தாயார் சன்னதி
மன்னை அழகுகளை ரசித்தீர்கள் , இங்கிருந்து நல்லிக்கோட்டை என்ற ஊர்
சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.
அது ஒரு பசுமை நிறைந்த சோலையாக காணப்படும் .