Tuesday, December 27, 2011

நல்லிக்கோட்டை

நல்லிக்கோட்டை

மன்னார்குடி

 திருவாரூர்

தமிழ்நாடு

இந்தியா



மன்னார்குடி பெரியகோயில்

என்ன நல்லிக்கோட்டை

என்று தலைப்பு போட்டுவிட்டு மன்னார்குடி பெரிய கோயில்  என்ற

தலைப்பும் , கோயில்  படத்தையும்

 போட்டு இருக்கு  என்றுதானே பார்கிறிங்க ,  நல்லிக்கோட்டை என்ற

எங்கள் ஊர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் ,  மன்னார்குடி வட்டத்தில்

அமைந்துள்ளது . எனவே முதலில் மன்னார்குடியை பற்றி பார்ப்போமா,

மன்னார்குடி

 என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது ராஜகோபாலசுவாமி

    கோயில்தான் எனவே அதை முதலில் தரிசிப்போம். அதில்

ராஜகோபாலசுவாமி  மற்றும்  தேவி செங்கமலத்தாயார் சன்னதியும் உள்ளது .



மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருகோயில் முகவாயில்


இங்கு

திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும் , அதிலும் பங்குனிதிருவிழா 

தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது  ( தமிழ் மாதம் - பங்குனியிலும் ,  ஆங்கில

மாதம் - மார்ச் ( MARCH  ) / ஏப்ரல் ( APRIL )  )  இம்மாதம்  நடைபெறும் .



முகவாயில் மாலைநேரம்  

திருவிழாக்காலங்களில்  மக்கள் கூட்டம் மன்றாடும் , வீதிகளில்

அழகானா தோரணங்கள் தொங்கும் , பட்ஜி மற்றும் வடை மனம் வீசும்.

ராஜகோபாலசுவாமி திருகோயில் வடதுபுறம்

இதன் அருகில் தென்னை மரம் மற்றும் பசுமை நிறைந்த சோலைகள்

காணப்படுகின்றன . இங்கு இயற்க்கை காற்று மற்றும் பசுமை வளங்கள்

நிறைந்துள்ளது .


மன்னார்குடி பெரியகோவில் குளம் 

தெப்பக்குளத்தில் திருகோயில் கோபுர நிழல் இருக்கு பாருங்கள் , 

இக்குளம் மிகவும் அழகாக காட்சிதரும் , மிக அமைதி வாய்ந்தது 

இது அமைந்துள்ள இடம் மன்னார்குடி - நீடமங்கலம் சாலை ஓரத்தில்

மன்னை ராஜகோபாலசுவாமி திருக்கோயிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ளது.


தெப்பக்குளத்தின் காட்சி



ராஜகோபாலசுவாமி திருகோயில் உட்புறம்

திருகோயில் உட்புறம் மிகவும் பழமை  வாய்ந்த அழகு பொருந்திய

இருப்பிடமாகும் .இதோ  ராஜகோபாலசுவாமி உருவம் வருகிறது பாருங்கள்


ராஜகோபாலசுவாமி சன்னதி  

இதோ தேவி செங்கமலத்தாயார் உருவம்

வருகிறது தரிசிப்போம்  வாருங்கள் . 

செங்கமலத்தாயார் சன்னதி

 மன்னை அழகுகளை ரசித்தீர்கள் , இங்கிருந்து   நல்லிக்கோட்டை என்ற ஊர் 

சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

அது ஒரு பசுமை நிறைந்த சோலையாக காணப்படும்  .













19 comments:

Unknown said...

மிக்க நன்றி அக்கா
நம்ம ஊர் பத்தி
படங்களுடன்
இன்னும் சற்று விரிவாக எழுதுங்கள்

VijiParthiban said...

வருகைக்கு மிக்க நன்றி சிவா அவர்களே. உங்கள் கருத்துக்கு நன்றி. இனிவரும் இடுக்கையில் விரிவாக எழுதுகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் விஜி.

VijiParthiban said...

புவனா அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .என்னுடைய வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா. நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .

இராஜராஜேஸ்வரி said...

முகவாயில் மாலைநேரம் படம் மிகவும் அருமை..

மற்ற படங்களும் நிறைவாக மனம் கவர்ந்தன..

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

VijiParthiban said...

அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி .

நன்றி! நன்றி!! நன்றி!!!..

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்குங்க படங்களும் பகிர்வும்..

VijiParthiban said...

மிக்க நன்றி அமைதிச்சாரல் அக்கா.

சசிகலா said...

மன்னார்குடி பக்கத்தில் உள்ள வடசேரி என் மாமியார் வீடு . படங்கள் அருமை .

VijiParthiban said...

ராதா ராணி அக்கா வருகைக்கு மிக்க நன்றி ...

VijiParthiban said...

சசிகலா அக்கா அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ....

அக்கா நீங்கள் வடசேரியா ரொம்ப சந்தோஷம் .... என்னுடை ஊரும் பக்கத்தில் உள்ள கிராமம்தான் அக்கா .....

நான் படித்தது வடசேரி பள்ளியில்தான் அக்கா..........

நம் நட்பு தொடரட்டும் .....

அனைவருக்கும் அன்பு  said...

அருமையான காட்சிகள் கண்முன் நிற்கிறது .........அருமை

VijiParthiban said...

வாங்க கோவை சரளா அக்கா அவர்களே . உங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நம் நட்பு தொடரட்டும் ....

viji said...

Orumurai poi parthal enna endru nenaika vaithathu in the post.
Aha parka parka verium kopuram......
Parthu mekavum rasithen....
Thanks dear for entering my blog and your sweet comment there.

VijiParthiban said...

Welcome to Viji Akka.... Thank your for your comments and Visit...

Mahi said...

Nice travel log...why you are not continuing it?

VijiParthiban said...

Welcome Mahi Akka. Thank you for your visit and comments.. continue this blog very soon. Yes..

Kanchana Radhakrishnan said...

படங்கள் அருமை.பகிர்வுக்கு நன்றி .

VijiParthiban said...

மிக்க நன்றி காஞ்சனா அக்கா....